பேத்தியுடன் சேர்ந்து டப்மாஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் செந்தில்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவர் வடிவேலு மற்றும் கவுண்டமணி உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து செய்த காமெடி கலாட்டாக்கள் இன்று வரை ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றன.

பேத்தியுடன் சேர்ந்த டப்மாஷ் செய்த செந்தில்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

தற்போது செந்தில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய பேத்தியுடன் சேர்ந்து டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.

அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் செந்தில் பேத்தி அவருடைய டயலாக்கை பேசி டப்ஸ்மாஷ் செய்துள்ளார். இதைப் பக்கத்தில் அமர்ந்து ரசித்துள்ளார் செந்தில்.

பேத்தியுடன் சேர்ந்த டப்மாஷ் செய்த செந்தில்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

இது குறித்த வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த அளவிற்கு எதார்த்தமாக செந்திலின் பேத்தி டப்மாஸ் செய்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.