Senior Citizen Emotional Video About Ajith
Senior Citizen Emotional Video About Ajith

தல அஜித் கடவுள் மாதிரி என 67 வயது முதியவர் ஒருவர் கண்ணீருடன் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார் பெண் இயக்குனர் ஒருவர்.

Senior Citizen Emotional Video About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் நடிகராக மட்டுமல்லாமல் கார் ரேஸ் பைக் ரேஸ் ஆளில்லா விமான வடிவமைப்பு என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டவர்.

பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இடம்பிடித்துள்ளார். அதற்கு இவருடைய கடின உழைப்பும் விடா முயற்சியும் தான் காரணம் என அனைவருக்கும் தெரியும்.

கொரானா முடியட்டும் மெகா கொண்டாட்டம் இருக்கு.. மங்காத்தா 2 குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு!

தற்போது பூவரசன் பீப்பி, சில்லுக்கருப்பட்டி ஆகிய வெற்றி படங்களை கொடுத்த பெண் இயக்குனரான Halitha தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 67 வயது முதியவர் கண்ணீருடன் அஜித்தை பற்றி பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடவுள் எப்பவும் நேரில் வந்து உதவுவதில்லை அது போன்ற மனிதர்களின் மூலமாகத்தான் உதவுகிறார். என அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ராகவா லாரன்ஸ் செய்து வரும் உதவிகள் குறித்தும் பேசியுள்ளார். இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித் குறித்து பெருமையாக பேசியுள்ளார் இயக்குனர் Halitha.

இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் தல ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்வதாக கூறி வருகின்றனர்.

https://twitter.com/sakxedge/status/1294299339225874437?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.