Sengottaiyan School Reopen in Tamilnadu
Sengottaiyan School Reopen in Tamilnadu

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் எனவும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Sengottaiyan School Reopen in Tamilnadu : சீனாவில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது.

மாஸ்டர் டிரைலர் கண்டிப்பா இப்படி தான்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்.!

இதுவரை இந்தியாவில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸிற்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்திலும் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

பனிரெண்டாம் வகுப்பிற்கான பேப்பர் திருத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு தொடங்க இருப்பதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ்..,விஷயம் என்ன தெரியுமா.?

மேலும் அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளைத் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதத்தில்தான் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பள்ளிகள் செயல்படும் முறையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.