Sendrayan Interview About Ajith
Sendrayan Interview About Ajith

அழுக்கு லுங்கியில் திருட்டு பையன் மாதிரி இருந்தேன். ஆனாலும் தல அஜித் இப்படியெல்லாம் செய்தார் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Sendrayan Interview About Ajith : தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்து பிரபலமானவர் சென்றாயன்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

போலீஸ் ஏன் அடிக்கிறாங்க?? கரோனா வைரஸ் பற்றி வடிவேலு வெளியிட்ட அடுத்த அதிரடி வீடியோ.!

ஒரு முறை ரோகினி காம்ப்ளக்சில் அஜித் சாருடைய படத்தின் ஷூட்டிங் நடந்து வந்தது. அப்போது காக்கி நிற காரில் செக்க செவேலென எம்.ஜி.ஆர் மாதிரி வந்து இறங்கினார்.

அவரை பார்த்ததும் நான் சார் எனக்கு ஏதாவது வேலையிருந்தா குடுங்க என கேட்டேன். அப்போது அஜித் வீட்டுக்கு வாங்க என முகவரியை சொன்னார்.

நான் கீழே இருந்த ஒரு சிகிரெட் அட்டையை எடுத்து மீண்டும் முகவரி கேட்ட போது சிரமமில்லாமல் அவரே எழுதி கொடுத்தார்.

அப்போது நான் ஒரு அழுக்கு லுங்கி மற்றும் பணியனில் திருடன் மாதிரி இருந்தேன். அப்படி ஒரு உடையில் இருந்த என்னிடம் அஜித் சாதாரணமாக நடந்து கொண்டார் என கூறியுள்ளார்.