Sendrayan Baby

Sendrayan Baby : என் மகன் அதிர்ஷ்டசாலி.. எனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைத்திருக்கு என மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் நடிகர் சென்றாயன்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் அறிந்த நடிகரானார் சென்றாயன்.

பழத்தை சுவைச்சிட்டு சொல்லுங்க, 90 ml சர்ச்சைக்கு ஓவியாவின் டபுள் மீனிங் பதில்.!

திருமணமாகி 4 வருடங்களாக குழந்தை இல்லாமல் வேதனைப்பட்டு வந்து சென்றாயன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது அவருடைய மனைவி கர்பமாகினார்.

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது குறித்து சென்றாயன் என் மகன் அதிர்ஷ்டசாலி. நான் பிறந்தது என ஊருக்கு தான் தெரிந்தது.

ஆனால் என் மகன் பிறந்ததை உலகமே கொண்டாடுது. உங்களது பிராத்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.

அதோடு தன்னுடைய மகனை கையில் தூக்கி வைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.