Sembaruthi Shabana Lover Details

பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யன் செம்பருத்தி ஷபானாவை காதலித்து வருவது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.

Sembaruthi Shabana Lover Details : தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஷபானா. இவர் இவரைப் பற்றி நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அந்தவகையில் இவரும் பாக்கியலட்சுமி சீரியலில் மூத்த மகனாக நடித்து வரும் ஆரியனும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இது ஓரளவிற்கு உண்மையாகியுள்ளது.

ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகை ஒருவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டுள்ளார். இதற்கு ஆரியன் ஷபானாவை டேக் செய்து என்ன சொல்லட்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சபானா மைன் என பதிலளித்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவது இந்த லைவ் சாட் மூலம் உறுதியாகி உள்ளது.