Sembaruthi Serial Shabana Request
Sembaruthi Serial Shabana Request

சமூக வலைதள பக்கங்களில் வலம் வரும் ஃபேக் ஐடி குறித்து பேசியுள்ளார் ஷபானா.

Sembaruthi Serial Shabana Request : தமிழ் சின்னத்திரையின் பிரபல சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சீரியல் செம்பருத்தி.

இந்த சீரியலில் நாயகியாக ஷபானா என்பவர் நடித்து வருகிறார். இதுதான் அவரின் அறிமுக சீரியல் என்றாலும் முதல் சீரியலிலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

அச்சு அசலாக அப்படியே மாளவிகா மோகனன் போலவே இருக்கும் பெண் – ரசிகர்களை வியக்க வைக்கும் வீடியோ!

இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் ஷபானாவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது.

இதனால் இவரது பெயரில் சில ஃபேக் ஐடிக்கள் உருவாக தொடங்கி உள்ளன. டுவிட்டரில் தன்னுடைய பெயரில் இயங்கி வரும் ஒரு போலி கணக்கு குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த கணக்கின் மீது புகார் அளித்து அதனை ஒழித்துக் கட்டும் மாறும் அவர் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.