பார்வதி, அகிலா  முன்பே  ஆதியை , மாமா என்று சொல்லி பேசுகிறாள்.  பார்வதி தன்னை மாமா என்று அழைத்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறார் ஆதி.   ஐஸ்வர்யா தான் நினைத்தபடி நடக்கவில்லையே என்று மனதில் கோபத்துடன் இருந்தாள். அந்த சமயம்  அருண், ஐஸ்வர்யாவிடம் சென்று பார்வதியும்,ஆதியும் மிகவும் தைரியமானவர்கள் என்கிறார் .

அதற்கு ஐஸ்வர்யா ஏன் , அப்படி சொல்கிறீர்கள் என்றாள். ஏனென்றால், பார்வதி போனில் பேசியது மாமாவிடம் அல்ல் ஆதியிடம் என்ற உண்மையை  ஐஸ்வர்யாவிடம் சொல்லி விடுகிறான்.  அகிலா தன் அப்பா போட்டோ தூசி படிந்து மாலை காய்ந்துப் போய் இருந்ததை பார்த்து மிகவும் கோபம் அடைகிறாள்.

உடனே  அகிலா,  ஐஸ்வர்யாவை அழைத்து போட்டோவில் இருப்பவர் என் தந்தை மட்டுமல்ல இந்த  வீட்டின்  காவல் தெய்வம் நீயாவது போட்டோவை சுத்தப்படுத்தி பூ போடகூடாதா  என்கிறாள். ஐஸ்வர்யா வருத்தத்தோடு நிற்கிறாள். பிறகு பார்வதியை அழைத்து இனிமேல் நீ தான் என் அப்பா போட்டோவிற்கு பூ போட்டு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் அகிலா. அதன்படியே பார்வதி செய்கிறாள்

அதன் பிறகு பார்வதி ஆதிக்கு போன் செய்து வீட்டில் நடந்த அனைத்தையும் மகிழ்ச்சியோடு  சொல்கிறாள். ஆதி , மும்பையில் இரவு  ஒரு விருந்திற்கு ஷியாமுடன் வருகிறார். அங்கு ,ஒரு பெண் ஹோட்டல்  ஊழியர், தன் மேல் குளிர்பானத்தை தவறுதலாக சிந்தி விட்டார். அதற்கு அந்த பெண் ஊழியரை அடிக்க முயலும் போது, ஆதி தடுத்து  விடுகிறார். ஆதி அந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஏனென்றால் ,அந்த பெண், நந்தினி. நந்தினியுடன் குருவும்  சேர்ந்து இருந்தான்.  குருவுடன் சேர்ந்து  நந்தினி ,ஆதியை பழி வாங்குவார்களா? ஆதி இவர்களின் சதியை முறியடிப்பாறா? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.