Sembaruthi Serial Kathir Engagement Photos
Sembaruthi Serial Kathir Engagement Photos

செம்பருத்தி சீரியல் நடிகரின் நிச்சயதார்த்தம் சைலன்டாக நடந்து முடிந்துள்ளது.

Sembaruthi Serial Kathir Engagement Photos : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் ஹீரோவாக கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார்.

அவரின் தம்பியாக நடிப்பவர் வி ஜே கதிர். இந்த சீரியல் மட்டுமல்லாமல் இன்னும் சில சீரியல்களில் இவர் நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு உறவினர்கள் மத்தியில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

லைட் கவர்ச்சியில் செம்பருத்தி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் கொடுக்கும் அட்வைஸ் – இதோ இந்த போட்டோவை நீங்களே பாருங்க.!

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு தன்னுடைய வருங்கால மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனக்கு திருமணம் நடக்க இருப்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் தற்போது லாக் டவுன், இ பாஸ் பிரச்சனை காரணமாக யாரையும் அழைக்கவில்லை. என்னுடைய திருமணத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கதிரின் இந்த பதிவை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

நடிகர் கதிர் தான் பெண் வேடமிட்டு இருந்த ஒரு புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.