Sembaruthi 16.10.18
Sembaruthi 16.10.18

செம்பருத்தி கதையில் அடுத்து குருவும் , வனஜாவும் சேர்ந்து பார்வதியை பழிவாங்க திட்டம் போடுகிறார்கள்.பார்வதியை கையும், களவுமாக அகிலா மு ன் நிறுத்த திட்டம் போடுவார்கள், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நேற்றைய எபிசோட்டில் பார்வதி பூரண குணமடைந்ததாக டாக்டர் கூறுகிறார். பார்வதியை தாய்மை உணர்வோடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். ஆதி, சரி அப்படியே பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். பார்வதியை , குழந்தைப் போல் தூக்கிக் கொண்டு போகிறார்.

அப்பொழுது இவர்களை குரு பார்த்து விடுகிறார். உடனே, வனஜாவுக்கு போன் செய்து அவர் பார்வதியை குருவோடு பார்த்த விசயத்தை கூறுகிறார். வனஜா இதை கேட்டு மிகவும் கோபப்படுகிறாள். அந்த சமயம் உமா அங்கு வருகிறார். இருவரும் சேர்ந்து பார்வதி , ஆதி இருவரையும் கையும், களவுமாக அகிலா முன் சிக்க வைக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள்.

அகிலா, பூஜையறையில் பூஜை செய்கிறாள். அங்கு செயினின் லாக்கெட் திறந்து இருந்தது, அதிர்ஷ்டவசமாக எலுமிச்சைப்பழம் உருண்டு வந்து லாக்கெட்டின் மீது பட்டு மூடிக் கொண்டது. பிறகு அந்த எலுமிச்சைப்பழம் அகிலாவிடம் உருண்டுச் சென்றது. அந்தப் பழம் கையில் கிடைத்ததும் அகிலா மகிழ்ச்சி அடைகிறார்.

பழம் விழுந்தது நல்ல சகுணம் .பார்வதி மீண்டும் வந்ததும், செயினை அவளுக்கு நானே போட்டு விட வேண்டும். என்று கூறுகிறார். மும்பையில் ஆதி ,பார்வதியை ஹோட்டலுக்கு தூக்கிக் கொண்டு வருகிறார். பிறகு மூவரும் சாப்பிடுவதற்காக உணவு தயாரிக்கிறேன் என்கிறார் பார்வதி.

ஆனால் ஆதி நான் டிபன் செய்கிறேன் என்கிறார். அதைக் கேட்ட ஷியாம், பார்வதி ஆச்சரியமாக ஆதியை பார்க்கின்றனர். இன்றைய பகுதியில் வனஜாவின் சூழ்ச்சியில் ஆதியும், பார்வதியும் சிக்குவார்களா? ஆதி, பார்வதியை காதலிக்கும் விஷயம் அகிலாவுக்கு தெரிந்தால் பார்வதியின் நிலை என்னவாகும்? அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here