செம்பருத்தி : ஆதியுடன் பார்வதி பேசிக் கொண்டிருப்பதை வனஜா பார்க்கிறாள். பின்னர் போனை எடுத்து மறைத்து வைத்து விடுகிறாள்.

பார்வதிக்கு ஆதியிடம் வரும் போன்காலை அகிலாவுக்கு செல்லும் படி காலை டைவர்ட் செய்து விடுகிறாள்.

சிறிது நேரம் கழித்து ஆதி பார்வதிக்கு போன் செய்யும் போது போன் டைவர்ட் ஆகி அகிலாவிற்கு செல்கிறது. பின்னர் ஒருவழியாக சமாளித்து விடுகிறார்.

வனஜாவிற்கு போன் செய்து பார்வதி போனில் ஒரு OTP நம்பர் வந்து இருக்கிறது அந்த எண்ணை கம்பெனி காரர்களிடம் சொன்னால் தான் உங்கள் அக்கவுண்டில் நூறு கோடி ரூபாய் போடுவார்கள் என்கிறார்.

வனஜா அதை உண்மை என நம்பி பார்வதி போனை தேடி அலைந்து அதில் உள்ள நம்பரை அனுப்பி வைக்க முயற்சிக்கிறார்.

ஆனால் அதில் அந்த எண் இல்லை. ஆதி பார்வதியிடம் பேச தான் இப்படியொரு நாடகம் நடத்தினான் என்பதை அறிந்துகொள்கிறாள் வனஜா.

இரவு பார்வதி தன் அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஆதியின் நினைவாக இருக்கிறாள்.

பின்னர் ஆதி கொடுத்த மணல் குடுவையில் மணலை சரிய வைக்கிறார். சரிந்து முடிவதற்குள் ஆதி வருவாரா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.

இன்றைய எபி-சோட்டில் பார்வதி-ஆதி ஒன்றாக இருப்பதை சுந்தரம் பார்த்து விடுகிறார். இனி அகிலா வீட்டில் பார்வதி இருப்பது கேள்விக்குறி தான்.

வனஜா ஏமாற்றபட்டதால் ஆதியை பழிவாங்குவாளா? சுந்தரத்தினால் ஆதி-பார்வதி காதல் தோல்வியை சந்திக்குமா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here