
Sembaruthi 31.10.18 :
அகிலாவின் பணபரிமாற்றத்தை முடக்கினால் நந்தினி. இதனை அறிந்த அகிலா, நந்தினியின் அனைத்து வசதிகளையும் முடக்கி விடுகிறாள்.
நந்தினியால் ஏ. டி. எம்மில் கூட பணம் எடுக்க முடியாத அளவுக்கு கார்டை லாக் செய்து விடுகிறாள் அகிலா. “நல்லவனாக வாழ்ந்து பார், அனைத்தும் கிடைக்கும் ,”என நந்தினிக்கு இறுதியாக அகிலா அறிவுரை கூறி எச்சரிக்கிறாள்.
ஆதி பார்வதியிடம் இன்று இக்கட்டான சூழ்நிலையில் உனது பணத்தை கொடுத்து அம்மாவின் கௌரவத்தை காப்பாற்றி விட்டாய் எனவே அம்மாவுக்கு உன்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்கும் என கூறுகிறாள்.
எனவே இன்று நம்முடைய காதல் பற்றி அம்மாவிடம் கூறப் போகிறேன் என்று பார்வதியிடம் கூறுகிறார். ஆதி தன் அம்மாவிடம் இன்று, என்னை நீங்கள் எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்காக ஒரு விளையாட்டை விளையாட போகிறேன் என்கிறார்.
அதற்காக ஆதி, தன் அம்மாவிடம் கொலுவிலிருக்கும் பொம்மைகளில் ஏதேனும் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
ஆதி, தன் அம்மா நினைத்தது பிள்ளையார் சிலை தான் என்று சரியாக சொல்லி விடுகிறார். அதேபோல் அகிலாவும், ஆதி நினைத்த சிலையின் பெயரை சரியாக சொல்லி விடுகிறார்.
இறுதியாக, ஆதியும் பார்வதியும் நாங்கள் இருவரும் ஒரு சிலையை நினைத்துக் கொள்கிறோம். குடும்பத்தில் உள்ள நீங்கள் அனைவரும் சரியாக கண்டு பிடியுங்கள் என்று போட்டி வைக்கின்றனர்.
ஆனால் குடும்பத்தில் உள்ள எவருமே சரியாக கண்டுபிடிக்க வில்லை. ஆனால், பார்வதி ,சரியாக கண்டுபிடித்து விடுகிறாள். அப்பொழுது அருண், பார்த்தீர்களா அம்மா! பார்வதி உங்களையும் ,ஆதி அண்ணனையும் சரியாக புரிந்து வைத்திருக்கிறார் என்று கூறுகிறார்.
இதை கேட்ட வனஜா கடும் கோபத்துடன் முறைத்துக் கொண்டு இருக்கிறார். அதே சமயம் ஆதி, அகிலாவிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
ஆனால் அகிலா , ஆதியை தடுத்து நிறுத்தி நான் முதலில் உங்களுக்கு ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்தப் போகிறேன் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
“மித்ரா” என்ற பெண்ணை காட்டி இவர் தான் இந்த வீட்டின் மூத்த மருமகள் என்று கூறுகிறார் அகிலா. ஆதி அதிர்ச்சியில் உறைந்து நிற்க ,பார்வதியின் கண்களில் கண்ணீர் கசிகிறது.
நாளைய எபிசோடில் ஆதி தன்னுடைய காதலை தன் அம்மாவிடம் கூறுவாரா ?மித்ரா உடன் ஆதிக்கு திருமணம் நடக்குமா? நாளை பார்க்கலாம்.