
நாளைய எபி_சோட்டில் வனஜா, பார்வதிக்கு விரித்த வலையில் அவளே விழுந்து விடுகிறார்.
இனி இன்றைய எபிசோட்டில் ….. பர்தா அணிந்த பெண் பார்வதி என கண்டுப்பிடித்த வனஜா, அந்த பெண்ணை மிரட்டி அடிக்க பார்கிறாள்.
பார்வதி, பயந்து நிற்கிறாள். அந்த சமயம் ஆதி, பார்வதியிடம் சொன்னன படி மணல் குடுவையில் மணல் சரிந்து முடிப்பதற்கு முன்னதாக வந்து விடுவிறார். பிறகு உமாவை பின் சீட்டில் உட்காரச் சொல்லுகிறார்.
ஆதி முன் சீட்டில் அமர்ந்து டிரைவரிடம் காரை மருத்துவமனையில்’ விடும்படி கூறுகிறார். மருத்துவமனையில், பார்வதியை அட்மிட் செய்கிறார் ஆதி. வனஜா பர்தாக்குள் இருப்பது பார்வதி தான் என்ற சந்தேகத்தை ஊர்சிதப்படுத்த வேண்டும் என்று நினைத்து பர்தா ” அணிந்த பெண்ணை “பார்வதி “, என்று அழைக்கிறார். பார்வதி சட்டென்று திரும்பி பார்க்கிறார். ஆனால் ஏதோ ஒன்று சொல்லி சமாதானப் படுத்துகிறார். இந்த திட்டம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இவர்களை நேரடியாக அகிலாவிடம் மாட்டிவிட வேண்டும் என்று திட்டம் போடுகிறார்.
அது என்னவென்றால் உமாவிடம் நீ, அகிலாவிடம் சென்று அந்த பர்தா அணிந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. அந்த குழந்தைக்கு நீங்கள் தான் சர்க்கரை தண்ணீர் முதலில் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண் கெஞ்சி கேட்கிறார் என்று சொல்லி அகிலாவை இங்கு அழைத்து வா என்கிறார்.
உமா அதன் படியே செய்கிறார். அகிலாவும் அங்கு வருகிறார். ஆனால் அகிலா அங்கு தலையில் அடிப்பட்டு பார்வதி படுத்து இருப்பதை பார்த்து அதிர்கிறார். ஆதியிடம் பார்வதி எப்படி இங்கு என்கிறார். அதற்கு ஆதி, தகவல் கிடைத்தது அதான் அம்மா இப்படி செய்தேன் என்றார்.
அகிலாவிடம் வனஜா ஏதோ எப்படியாது சொல்லி பார்வதியை மாட்டி விட முயற்சி செய்கிறார். முயற்சிகள் அனைத்தும் வீணாகிறது. அடுத்த எபி- செட்டில் அகிலாவிடம் பார்வதி சிக்குவாளா. ?. வனஜாவின் சூழ்ச்சியில் மாட்டுவாளா பார்வதி.? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.