அருண், ஆதியிடம் போனில் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டு கேட்ட உமா, அந்த விஷயத்தை அப்படியே சென்று வனஜாவிடம் சொல்கிறாள். உடனே வனஜாவும் , உமாவும் சேர்ந்து திட்டம் தீட்டுகின்றனர்.

ஆதியும், பார்வதியும் ஒன்றாக மும்பையில் இருந்து வருவதை எப்படியாவது அகிலாவிடம் சொல்லி விடவேண்டும் என்று திட்டம் தீட்டி உமா மூலமாக இந்த விசயத்தை வனஜா அகிலாவிடம் ஆதி எனக்கு போன் செய்து மாலை 4 மணிக்கு ஏர்ப்போர்ட்டில் தன்னை பிக் அப் செய்யுமாறு அம்மாவிடம் சொல்லுங்கள் என்றார்.

அகிலா இதை கேட்டதும் சந்தோஷப்படுகிறார். ஆனால், அருண் அதிர்ச்சியில் உறைகிறான். இதை எப்படியாவது ஆதியிடம் சொல்லவேண்டும் என்று துடிக்கிறான். ஆனால் இருவரது போனும் ஸ்விட்ச்-ஆப் ஆகிவிட்டது. அருணால் தகவலை ஆதியிடம் சொல்ல முடியவில்லை.

வனஜா, உமா, அகிலா, மற்றும் அருண் இவர்கள் அனைவரும் ஆதியை பிக் – அப் செய்ய ஏர் போர்ட்டில் காத்திருக்கின்றனர். அருண் கடைசி நிமிடம் வரை ஆதிக்கு போன் செய்து அம்மா வரும் தகவலை சொல்ல முயற்சிக்கிறான். ஆனால் முடியவில்லை.

ஆதி ஏர் போர்ட் வந்ததும் ஒரு பிசினஸ் மேன், அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கிறார். அப்பொழுது அவரது மனைவி அகிலா மேடமுடன் நானும் போட்டோ எடுத்தேன் என்றுஎடுத்த போட்டோவை காட்டுகிறார். அவரது கணவர் ‘நீ அகிலா மேடமிடம் போட்டோ எடுத்தாய். நான் அவரது மகன் ஆதியுடன் போட்டோ எடுத்தேன் பார் என்கிறார்.

இதை கவனித்த ஆதி தனது அம்மா வந்திருப்பதை அறிந்துக் கொள்கிறார். பிறகு யோசித்து பார்வதியை பர்தா அணிந்து தனியாக, அவர்கள் சென்ற பிறகு மாறுவேடத்தில் வருமாறு கூறுகிறார். அதன்படியே பார்வதியும் செய்கிறாள்.

இன்றைய எபி -சோட்டில் மாறுவேடத்தில் வரும் பார்வதி அகிலாவிடம் சிக்குவாளா ?. வனஜா இவர்கள் திட்டத்தை கண்டுப்பிடித்து விடுவாளா? என்பதை பார்ப்போம்.