பர்தாஅணிந்துக் கொண்டு மாறுவேடத்தில் வரும் பார்வதி தடுக்கி விழும் போது அகிலா தாங்கி பிடித்துக் கொள்கிறாள். அகிலா ,அந்த பெண்ணை பார்த்து ஏம்மா தனியாக வந்தாய்? கூட யாரும் வரவில்லையா? என்கிறார்.

அதற்கு பார்வதி, இல்லையம்மா என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.அதான் தனியாக வந்தேன் என்கிறாள். அதைக் கேட்ட அகிலா, நீ எங்கு போக வேண்டும் சொல் நான் அங்கு உன்னைவிட்டு விட சொல்கிறேன் என்கிறார். உடனே வனஜா காரில் பார்வதியை ஏறுமாறு கூறுகிறாள்.

அதைக் கேட்ட பார்வதி பயத்தில் உறைந்து நிற்கிறாள். ஆதி, பார்வதியிடம் பயப்படாமல் வனஜாவோடு செல் என்று கூறி ஒரு மணல் குடுவையை தருகிறார். உனக்கு வனஜா மூலமாக ஏதாவது ஆபத்து வந்தால் இந்த மணல் குடுவையை பார், மணல் சரிந்து காலியாவதற்கு முன் நான் உடனே வந்து காப்பாற்றுவேன் என்கிறார்.

பார்வதி அதை வாங்கி கொண்டு காரில் ஏறுகிறாள். காரில் இருக்கும் பார்வதிக்கு , ஆதி போன் செய்கிறார். பார்வதி போன் எடுக்கும் போது தவறி கீழே விழுந்து விடுகிறது. வனஜா அந்த போனை எடுத்து தருகிறார். அந்த போனில் மாமா என்ற பெயர் வந்தததை வனஜா கவனித்து விடுகிறார்.

அந்த முஸ்லீம் பெண் மீது சந்தேகம் வந்ததால் அவர் முகத்தை பார்க்க திட்டம் போடுகிறார் வனஜா. இளநீர் வாங்கிக் கொடுத்து குடிக்கும் படி கூறுகிறார்கள். பார்வதி இளநீர் வாங்கி அதில் 2 ஸ்ட்ரா போட்டு நீட்டி முகம் காட்டாமல் குடிக்கிறார்.

பார்வதியின் இந்த செயலால் எரிச்சல் அடைந்த வனஜாவிடம் உமா, அத்தை நீங்கள் பார்வதி போனுக்கு கால் செய்யுங்கள் அப்போது மாட்டிக் கொள்வாள் என்கிறாள். அதன் படியே வனஜாவும் போன் செய்கிறார். பார்வதியின் போன் அடிப்பதை வனஜாவும், உமாவும் கவனித்து விடுகின்றனர்.

பார்வதியை எப்படியாவது அகிலாவிடம் மாட்டி விடவேண்டும் என்று நினைத்து வீட்டிற்கு நேராக வண்டியை விடவேண்டும் என்று டிரைவருக்கு கட்டளையிடுகிறார். அதன்படியே டிரைவரும் செல்கிறார்.

ஆனால் வண்டியின் முன் ஆதி, பார்வதியிடம் சொன்னப்படி வந்து நிற்கிறார். வனஜாவிடம் இருந்து பார்வதியை ஆதி காப்பாற்றுவாறா? வனஜாவின் திட்டம் பலிக்குமா? அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here