
அகிலாவுக்கு தெரியாமல் மித்ரா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதனால் மிகவும் கோபமடைந்த அருண், மித்ராவிடம் கடிந்துக் கொள்கிறார்.
மேலும் அருண், அகிலாவிடம் ஆதியின் வருங்கால மனைவி என்று அறிவித்த நந்தினியுடன் திருமணம் நடந்ததா? இல்லையே. சென்டிமென்ட்டாக வேணாம் என்று தோன்றுகிறது. அதனால் தான் கோபபட்டேன் என்கிறார்.
அகிலாவும் அருண் நினைப்பது சரி தான் என்கிறார். உடனே அகிலா , ஆதியிடம் ஏதாவது சமாதானம் செய்து பத்திரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைத்து விடு என்று கூறுகிறார்.
ஆதியும் சரி என்று கூறி பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். பத்திரிக்கையாளர்களிடம் என்ன சொல்வது என்று தெறியாமல் ,எங்களது கம்பெனி சார்பாக பிராண்ட் அம்பாசிடர் போட்டி நடைபெற உள்ளது என்று அறிவிக்கிறார்.
இதற்கிடையில் சுந்தரம், பார்வதியை ஊருக்கு கிளம்ப சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் .பார்வதியும் கிளம்புகிறார்.
அந்த சமயம் ஷியாம் பார்வதியை ஆதி அழைப்பதாக கூறி அழைத்து செல்கிறார். பார்வதியும் உடனே கிளம்பி செல்கிறார்.
ஆனால் ,அகிலாவின் வார்த்தையை மீறி வீட்டிற்குள் எப்படி செல்வது என்று தயக்கத்துடன் வெளியே நின்று கொண்டிருக்கிறார்.
ஷ்யாம் எவ்வளவு கூறியும் உள்ளே வராத பார்வதி, ஆதியின் கை அசைவை பார்த்தவுடன் வீட்டிற்குள் நுழைகிறாள்.
தயக்கத்துடன் உள்ளே நுழைந்த பார்வதியை ஆதி பத்திரிகையாளர்களிடம் பார்வதியை இந்த வருடமும் பிரான்ட் அம்பாசிடர் போட்டியில் எங்கள் நிறுவனத்தின் சார்பாக பார்வதிதான் பங்கேற்பார் என்று கூறுகிறார்.
இதை பார்த்த மித்ரா உடனே அகிலாவிடம், உங்கள் பேச்சை மீறி ஆதி, பார்வதியை வீட்டிற்குள் அழைத்து விட்டார் என்று கூறுகிறார்.
மித்ராவின் பேச்சைக் கேட்டு கோபம் அடைந்த அகிலா ,ஆதியிடம் கடுமையாக பேசுகிறார். ஆதி, உன்னை பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் ,என் வாழ்க்கையில் முதல் முறையாக நீ என் பேச்சை மீறி இருக்கிறாய் என்று கூறி மிகவும் வருத்தப்படுகிறார்.
ஆனால் ஆதி, நான் கனவில் கூட அதுபோல நினைத்ததில்லை அம்மா என்று கூறி மன்னிப்பு கேட்கிறார் . அதே சமயம் ஆதி, அருணிடம் பார்வதியை வீட்டிலிருந்து டிரெய்னி கொடுக்க முடியாது.
அதனால் ஆபிஸில் வைத்துக் டிரெய்னிங் கொடுக்கலாம் என்கிறார். ஆதி கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.
நாளைய எபிசோடில்— பார்வதி போட்டிக்கு தயாராவதை அகிலா ஏற்ப்பாளா? நந்தினி மற்றும் மித்ராவின் அடுத்த கட்ட திட்டம் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.