மித்ரா கோவிலில் 108 விளக்குகளை ஏற்றி விட்டு அம்மனுக்கு பூஜை செய்வதற்காக தேங்காய், பூ, பழம் வாங்குவதற்காக மித்ரா பார்வதியுடன் கடைக்கு சென்று வாங்கி வருகிறார்.

ஆதி, ஷியாம் எதிர்பார்த்தபடி தேங்காய் அழுகவில்லை. தேங்காய் நல்ல படியாக உடைந்தது. ஷியாம் கடைக்காரரிடம் அழுகிய தேங்காய் தான் கொடுக்க சொன்னேன்.

ஆனால், தேங்காய் நன்றாக உடைந்து இருக்கிறதே என்று ஆதியிடம் கூறுகிறார். ஆதி தேங்காய் நல்ல படியாக உடைந்ததும் நல்லது தான். ஏனென்றால் , பார்வதி தான் முதலில் விளக்கேற்றினால் அவளுடைய பிரார்த்தனை நல்ல படியாக முடியும் என்று கூறுகிறார்.

அனைவரும் கோவிலில் இருந்து கிளம்பும் போது தான் கதையில் ஒரு திருப்பம். நந்தினியால் ஏவபட்டவள் தான் மித்ரா. மித்ராவிற்கு நந்தினி போன் செய்து, வனஜா இங்கு என்னை சந்திக்க வந்தாள்.

நீ வனஜாவிடம் கோபமாக நடந்து கொண்டதை கூறினால் நீ வனஜாவிடம் தாமரை மேல் உள்ள நீர் போல பட்டும் படாமல் இரு என்று கூறுகிறார்.

மேலும் மற்றதை நேரில் பார்க்கும் போது பேசிக் கொள்ளலாம் நாம் இருவரும் அடிக்கடி போனில் பேசக்கூடாது என்று கூறி போனை வைத்து விடுகிறான் நந்தினி.

அனைவரும் கோவிலில் இருந்து வீட்டிற்கு செல்கிறனர். வீட்டில் பத்திரிக்கையாளர்கள் அகிலாவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், அகிலா பத்திரிக்கையாளர்களை நான் அழைக்கவில்லையே? என்று கூறுகிறார்.

பின்பு யார் அழைத்தது என்று ஒவ்வொருவரிடமும் கேட்கிறாள். இறுதியில் மித்ரா நான் தான் பத்திரிகையாளர்களை அழைத்தேன் என்று கூறுகிறார்.

இதனை கேட்டவுடன் அருண் மித்ராவை மிகவும் கடினமாக திட்டுகிறார். அதற்கு மித்ரா உனக்கு வரப் போகும் அண்ணியை இவ்வாறு தவறாக பேசக் கூடாது. என்னை ஒழுங்கா அண்ணி என்று அழை என்கிறார்.

அருண் மித்ராவிடம் மரியாதைக் குறைவாகப் பேசுவதை பார்த்த அகிலா அருணை அடித்து விடுகிறார்.

உடனே மித்ரா அகிலாவிடம் இதற்காக தான் நான் பத்திரிகையாளர்களை கூப்பிட்டேன். அருணே என்னை அண்ணி என்பதை ஏற்றுக் கொள்ளாத போது, இந்த சமூகத்தில் எனக்கு ஒரு அங்கீகாரம் தேவை.

அதனால் தான் பத்திரிக்கையாளர்களிடம் ஆதிக்கும் எனக்கும் திருமணம் செய்வதை அறிவியுங்கள் என்கிறார்.

நாளைய எபிசோடில் மித்ரா நந்தினியின் கையாள் என்பது அனைவருக்கும் தெரிய வருமா? அகிலா, ஆதி மித்ராவின் திருமண தேதியை பத்திரிக்கையாளரிடம் அறிவிப்பாரா ? நாளை பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here