சுந்தரமும் வந்தால் நன்றாக இருக்கும் என்று  ஆதி கூறியதால், அகிலா சுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல அனுமதிக்கிறாள்.
சுந்தரமும் பார்வதியோடு வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது மித்ரா காரில் ஏறும் பொழுது தன்னுடைய புது செருப்பு  கடிக்கிறது என்று கூறி, காலில் உள்ள தன் செருப்பை கழட்டி  பார்வதியிடம் கொடுத்து உள்ளே வைத்து விட்டு தன்னுடைய  பழைய செருப்பை எடுத்து வரும்படி கூறுகிறாள்.
பார்வதியும் தன் கைகளால் மித்ராவின் செருப்பை எடுக்க  செல்கிறாள். அப்பொழுது ஆதி தடுத்து விடுகிறார்.
ஆதி, மித்ராவிடம் பார்வதி இந்த குடும்பத்தில் ஒருத்தி !அது மட்டுமல்லாமல் எங்களுடைய பரம்பரை  செயினை போட்டுக் கொண்டு செருப்பை எடுத்தால் அது எங்கள் பரம்பரைக்கு தான் அவமானம் என்று கூறுகிறார்.
அகிலாவும் ஆதி  கூறியதை சரி என்று ஏற்றுக் கொள்கிறார். பிறகு மித்ராவே தனது பழைய செருப்பை எடுத்துக் கொண்டு வருகிறாள்.
அனைவரும் கோவிலுக்கு புறப்படும் பொழுது சுந்தரத்திற்கு அருண் போன் செய்து,  நான் முக்கியமான ஒரு சிகப்பு நிற பைலை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டேன்.
நீங்கள்  உடனடியாக அதை எடுத்துக் கொண்டு ஆபிஸ்க்கு வரவேண்டும்  என்று சுந்தரத்திடம் அருண் கூறுகிறார்.
அகிலாவும் சுந்தரத்தை  ஆஃபீஸ்க்கு செல்லும்படி கூறுகிறார். உமா  துணைக்கு பட்டு மாமியை அழைத்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார்.
ஆனால் அகிலா பார்வதியை அழைத்து கொள்ளும் படி கூறுகிறார். அனைவரும் கோவிலுக்கு புறப்படுகின்றனர்.
அப்போது ஷியாமிடம்  ஆதி, அருணை வைத்து சுந்தரத்தை ஆபீஸ்க்கு அழைக்க சொன்னது நான் தான் என்று கூறுகிறார்.
அனைவரும் கோவிலை அடைந்தவுடன் ஷியாம் தேங்காய் விற்பவரிடம் அழுகிய தேங்காயை மித்ராவிடம் கொடுக்கும்படி கூறுகிறார்.
அதற்காக ஷியாம்  500 ரூபாய் லஞ்சம் தருகிறார்.  அகிலா பார்வதியிடம் 108 எலுமிச்சை பழ  விளக்குகளை சீக்கிரமாக தயார் செய் என்று கூறுகிறார்.
பார்வதியும் சரி என்று கூறி எலுமிச்சம் பழங்களை எடுத்து வருகிறார்.  பார்வதியே108 எலுமிச்சைபழ விளக்குகளை தயார் செய்கிறார்.
பார்வதி இவ்வளவு வேலைகள் செய்வதை பார்த்து, ஆதி மன வேதனை அடைகிறார்.   மித்ரா 108 விளக்குகளை ஏற்றுவதற்காக கோவில் பிரகாரத்திற்கு செல்கிறார்.
மித்ரா விளக்கேற்றும் பொழுது தீப்பெட்டி  ஏற்றுவதற்காக  சிரமபடுகிறாள் .அப்பொழுது மித்ரா ,பார்வதியிடம் நீ முதல் விளக்கை ஏற்றிக்கொடு பார்வதி ,பிறகு அந்த விளக்கில் இருந்த நான் மற்ற விளக்குகளை ஏற்றுகிறேன் என்று கூறுகிறார்.
பார்வதியும் சரி என்று கூறியபடியே முதல் விளக்கை ஏற்றுகிறாள்.  பார்வதி ஏற்றிய விளக்கில் இருந்து மித்ரா மற்ற விளக்குகளை ஏற்றுகிறார்.
முதல் விளக்கை யார் ஏற்றி கிறாரோ ,அந்த விளக்கில் இருந்து மற்ற விளக்குகளை பற்ற வைத்தால் கூட அதுவும் முதல் விளக்கை ஏற்றுபவர்க்கே நன்மை தரும் என்று கூறுகிறார்.
ஆதி அம்மாவின் வேண்டுதலை, நீதான் பார்வதி நிறைவேற்றி இருக்கிறாய்.  இந்த வீட்டில் மருமகள் நீதான் என்பது கடவுளின் விருப்பம் என்று பார்வதியிடம்  ஆதி ஆனந்தமாக கூறுகிறார்.
இன்றைய எபிசோட்டில்—– கடவுள் வேண்டுதலின் போது தேங்காய் அழுகி விடுமா ? பார்வதி மீண்டும் அகிலாவின் வீட்டிற்குள் நுழைவாரா?  என்பதை பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here