
மித்ரா திருமணம் நடக்கும் வரை சுந்தரம், தன் கிராமத்தில் உள்ள வீட்டில் பார்வதியை தங்கவைப்பதற்காக ஊருக்கு அழைத்து செல்கிறார்.
அகிலா ,மித்ராவிடம் தன் குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் கிடைத்துவிட்டால் அம்மனுக்கு 108 எலுமிச்சை விளக்கு போடுவதாக வேண்டி இருக்கிறேன் என்று கூறுகிறார்.
ஆதலால் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நாம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்கிறார். அந்த சமயம் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அருண் கேட்டு விடுகிறார்.
அகிலா கூறியதைக் கேட்ட அருண், அந்த விஷயத்தை ஆதிக்கும், ஷியாமுக்கும் தெரியப்படுத்துகிறார்.
அப்பொழுது அருண் ,அம்மா சென்டிமென்ட் பார்ப்பவர், ஆதலால் விளக்கேற்றிய பின் தேங்காய் உடைக்கும் பொழுது அழுகிய தேங்காயை நாம் வைத்து விடலாம்.
இதை வைத்து மித்ரா, நம் குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் இல்லை என்பதை நாம் அம்மாவிற்கு தெரிவிக்கலாம் என்று ஐடியா கூறுகிறார்.
ஆதியும் அருண் கூறுவதை ஏற்றுக் கொள்கிறார். ஆதியும், மித்ராவும் எதிர் எதிரே வந்து கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது மித்ரா ஆதியுடன் கைகோர்த்தபடி இறங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கைகோர்க்க நினைக்கிறார்.
ஆனால் கைகோர்க்க முடியாமல் தவறி விழுந்து விடுகிறார். இதனை பார்த்த ஷியாம் சிரித்து விடுகிறார்.
சிரித்தது மட்டுமல்லாமல் மித்ராவிடம், ஆதியுடன் கைகோர்ப்பது அவ்வளவு ஈஸி அல்ல ! நீங்கள் இப்போது தானே வந்தருக்கிறிர்கள், போகப் போகத் தான் தெரியும் என்று கூறி மித்ராவை அவமானப்படுத்தி விடுகிறார்.
அகிலா குடும்பத்தில் வனஜா தவிர அனைவரும் கோவிலுக்கு புறப்படுகின்றனர்.
இதற்கிடையில் சுந்தரம் பார்வதியை தன் கிராமத்திற்கு அழைத்து செல்வதற்காக ஊருக்கு கிளம்பி விடுகிறார்.
பார்வதி ஊருக்கு செல்ல மனமில்லாமல் செல்கிறாள். மேலும் நாம் ஊருக்கு கிளம்பும் விஷயத்தை எப்படியாவது ஆதிக்கு தெரிவிக்க நினைக்கிறாள்.
தன் தந்தை அருகில் இருப்பதால் போன் செய்ய முடியாமல் ஆதி கொடுத்த மணல் கடிகாரத்தை எடுக்கிறாள் பார்வதி.
அதன் பிறகு ஆதியை நினைத்து மணல் கடிகாரத்தை திருப்பி வைக்கிறாள்.
இதற்கிடையில் கோவிலுக்கு புறப்படும் ஆதி , அகிலாவிடம் சுந்தரமும் கோவிலுக்கு வர வேண்டும் என்கிறார். அகிலாவும் ஏற்றுக்கொள்கிறார்.
ஆதி சுந்தரத்திற்கு போன் செய்து எங்களுடன் கோவிலுக்கு வர வேண்டும் என்கிறார். சுந்தரமும் சரியென்று கூறுகிறார்.
ஊருக்கு சென்றிருந்த அவர் திரும்பி அகிலா வீட்டிற்கு வந்து விடுகிறார். பார்வதி திருப்பி வைத்த மணல் கடிகாரத்தில் மணல் முழுவதும் காலியாவதற்கு முன் ஆதியைப் பார்த்து விடுகிறார்.
நாளைய எபிசோட்டில்—பார்வதி அகிலா வீட்டிலேயே தங்கி விடுவாளா? அகிலாவின் வேண்டுதல் நிறைவேறுமா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.