Selvaraghavan Salary for Beast Movie

பீஸ்ட் படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் செல்வராகவன் வாங்கும் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

Selvaraghavan Salary for Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘கருணாநிதிக்கு நினைவிடம்’ மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம் : பேரவையில் ஓ.பன்னீர்செல்வம்

பீஸ்ட் படத்தில் நடிப்பதற்காக செல்வராகவன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? இரண்டாவது படத்திலேயே இவ்வளவு பெரிய தொகையா??

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, விடிவி கணேஷ் என பல முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது இவர் இப்படத்திற்காக வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Indian 2 குறித்து அப்டேட் சொன்ன Kamal Haasan! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Latest Cinema News

சாணி காகிதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் செல்வராகவன். இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். தன்னுடைய இரண்டாவது படத்திற்கு அவர் ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் இரண்டாவது படத்திற்கே இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வழங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது