Selvaraghavan Next Movie Update
தன்னுடைய அடுத்த படம் பற்றிய தகவலை செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Selvaraghavan Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். எப்போதும் வித்தியாசமான கதைகளுடன் சிறந்த படங்களை கொடுத்து வருபவர்.

இவர் இறுதியாக சூர்யாவை வைத்து இயக்கி இருந்த NGK திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை என்றாலும் அதில் இருந்த நுணுக்கங்களும் ட்விஸ்ட்களும் பலரையும் கவர்ந்திருந்தது.

இதனால தான் நீங்க தல.. அஜித்தின் செயலால் அசந்து போன திரையுலகம் – அப்படி என்ன செய்தார் தெரியுமா? – வைரலாகும் வீடியோ

இது ஒரு புறம் இருக்க இவர் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்னும் ரிலீசாகாமல் கிடப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுத்த படத்திற்கான கதை எழுதும் வேலையை தொடங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த ட்வீட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆ? புதுப்பேட்டை 2-ஆ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.