நானே வருவேன் படத்தில் செல்வராகவன் லுக் குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Selvaraghavan Look in Naane Varuven : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தில் தனுஷிற்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் அவர்களே நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தின் தன்னுடைய லுக்கு குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நானே வருவேன் படம் மட்டும் அல்லாமல் சாணி காகிதம், பீஸ்ட் என பல்வேறு படங்களில் செல்வராகவன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.