
பீஸ்ட் படத்தில் பிரபல இயக்குனர் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
Selvaraghavan in Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மாஸ்டர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகி பாபு விடிவி கணேஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே சாணி காகிதம் என்ற படத்தின் மூலமாக நடிப்பில் இறங்கியுள்ள செல்வராகவன் தற்போது பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரச்சனை எல்லாமே Simbu-வால் தான்! – FEFSI Union Head RK Selvamani Opentalk
இந்த படத்தில் இவர் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு செட்டாகும்? என ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.