Selvaraghavan Gettup in Saani Kagitham

கையில் துப்பாக்கியுடன் டெரர் லுக்கில் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Selvaraghavan Gettup in Saani Kagitham : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். தனித்துவமான காதல் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

கையில் துப்பாக்கியுடன் டெரர் லுக்கில் செல்வராகவன் - இணையத்தில் வைரலாகும் சாணி காகிதம் பட கெட்டப்

தொடர்ந்து பல படங்களை இயக்கி வரும் இவர் அடுத்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். மேலும் சாணி காகிதம் என்ற படத்தின் மூலமாக நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் செல்வராகவனுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வருகிறார்.

தற்போது சாணி காகிதம் படத்தில் கையில் துப்பாக்கியுடன் டெரர் லுக்கில் இருக்கும் செல்வராகவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.