Selvaraghavan Asks Fans | Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | Kollywood | Tamilcinema | Latest Cinema News

இப்படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை ரசிகர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என செல்வராகவன் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

Selvaraghavan Asks Fans :

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஒரு நாளுக்கு 25 லட்சம் கொடுத்தா வரேன், பிக் பாஸ் டீமை திணற விட்ட காமெடி நடிகர்.!

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க தற்போது இப்படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை ரசிகர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என செல்வராகவன் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

நந்த கோபாலன் குமரன் இப்படத்தில் எப்போது என்.ஜி.கே – வாக மாறினார் என யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம் எனவும் சரியாக பதில் சொல்லும் ரசிகர்களை தான் தேர்ந்து எடுக்கப் போவதாகவும் செல்வராகவன் கூறியுள்ளார்.

இப்படி ஓடாத ஒரு படத்தை அவர் தேவையில்லாமல் ப்ரோமோட் செய்வது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.