Selvaraghavan Apologies to Fans

சமீபத்தில் செல்வ ராகவன் அளித்த பேட்டியினால் சர்ச்சையில் சிக்கியதால் ‌ ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Selvaraghavan Apoligies to Fans : செல்வ ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் பல போராட்டங்களை கடந்து நெஞ்சம் மறப்பதில்லை படம் மார்ச் 5 செல்வ ராகவன் பிறந்த நாள் அன்று ரீலீஸ் ஆனது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். ரெஜினா மற்றும் நந்திதா இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நந்திதா நடித்துள்ளார். ராம்சே என்னும் பெயரில் எஸ்.ஜே‌‌.சூர்யா தன் வீட்டில் வேலை பார்க்கும் ரெஜினாவை அடைய துடித்து இறுதியில் ரெஜினா இறந்து பேயாக வந்து பழிவாங்குவதை செல்வ ராகவன் வித்தியாசமான முறையில் காட்டியுள்ளார். யுவனின் இசையும் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவுமே இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக ரசிகர்கள் பாராட்டியுள்ளார்கள்.

சமீபத்தில் செல்வ ராகவன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் பரத்வாஜ் ரங்கன் அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஈழ தமிழர்கள் பற்றி மறைமுக கருத்து ஒன்று இருந்தது அதே மாதிரி நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ராமசாமி என்னும் பெயரை கொண்டவருக்கு எதிராக கடவுளை வைத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு தலையாட்டியுள்ளார். அதற்கு பரத்வாஜ் பதில் சொல்ல வேண்டாம் தலை அசைத்தால் போதும் என கூறியதற்கு ஆம் என்று சொல்லியிருக்கிறார். இந்த பேட்டி வெளியான நிலையில் செல்வ ராகவன் பெரியாருக்கு எதிராக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செல்வ ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நண்பர்களே அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை.இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும் மன்னிக்கவும் என்று கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.