தனுஷின் அந்தப் படம் ஃப்ளாப் ன்னு சொன்னாங்க அப்படியே நொந்து போயிட்டேன் என செல்வராகவன் கூறியுள்ளார்.
Selvaraghavan About Dhanush’s Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை.
இந்த படத்தை செல்வராகவன் தான் இயக்கி இருந்தார். தற்போது இப்படம் குறித்து உருக்கமான விஷயம் ஒன்றை பேட்டியில் கூறியுள்ளார்.
விரைவில் தொடங்குகிறது பிக்பாஸ் 4 – வெளியானது சூப்பர் தகவல்!
படம் ரிலீஸான முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றேன்.அப்போது அங்கே ஒருவர் படம் நன்றாகவே இல்லை நாளையே டிவில போட்டுவாங்க, அப்போ பார்த்துக்கலாம் என்றார்.
அவர் கூறியதைக் கேட்டதும் அப்படியே நொந்து போயிட்டேன். நேரா வீட்டிற்கு வந்து தூங்கிட்டேன்.
மாலையில் உதவி இயக்குனர் ஒருவர் போன் செய்து சார் உங்க படம் ஹவுஸ்புல் என கூறினார். அதனை நம்பாத நான் பொய் சொல்லாதீங்க வேற ஏதாச்சு படமா இருக்கும் நல்லா பாருங்க என கூறினேன்.
இல்ல சார் உண்மையாகத் தான் சொல்றேன் நீங்க வாங்க என அவர் அழைத்ததும் நான் தியேட்டருக்கு போனேன் டிக்கெட் வாங்குவதற்காக பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது.
சிம்புவின் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்.. யாருக்கு தெரியுமா? – STR வெளியிட்ட புகைப்படங்கள்!
இன்னும் சொல்லப் போனால் அந்தப் படத்தை நாங்கள் கடுமையான பண நெருக்கடியில் தான் எடுத்தோம் என கூறியுள்ளார்.
இந்த படத்தின் மூலமாக தான் நடிகை பிக் பாஸ் ஷெரீன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.