தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்தை ஒரு மாதத்திற்கு முன்னரே செல்வராகவன் கணித்ததாக டுவிட் ஒன்று வைரலாகி வருகிறது.

Selvaraghavan About Dhanush Divorce : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நடிகர் தனுஷ் திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மக்களுடனான திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்தது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2 தினங்களாகவே சமூக வலைதளங்களில் தனுஷ் விவாகரத்து குறித்து பேசப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் தற்போது ஒரு மாதத்திற்கு முன்னதாக செல்வராகவன் பதிவிட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்தை இவர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கணித்ததாக கூறி வருகின்றனர்.

அதாவது செல்வராகவன் பதிவு செய்துள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை ஆட்டம் : அயர்லாந்தை அலற விடுமா, இன்று இந்திய அணி

தனுஷ் ஐஸ்வர்யாவிற்கு அறிவுரை சொல்லும் விதமாக இந்த பதிவு இருப்பதாக தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

நான் சிம்பு ஹரிஷ் கல்யாண் மாதிரி பாத்த உடனே அழகா இருக்க மாட்டேன், பாக்க பாக்க தான்! #dhanush #simbu