இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இசைக்குறித்து பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் பிரபல இயக்குனராக திகழ்பவர் தான் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணனான இவர் தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக திகழும் இவர் தற்போது பல படங்களில் சிறந்த நடிகராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இசை புயலை பாராட்டிய செல்வராகவன்!!… வெளியான ட்விட்டர் பதிவுகள் வைரல்!.

இந்நிலையில் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசைக்குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு பதில் அளித்திருக்கும் இசை புயல் ஏ ஆர் ரகுமானின் ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது.

இசை புயலை பாராட்டிய செல்வராகவன்!!… வெளியான ட்விட்டர் பதிவுகள் வைரல்!.

அதாவது, செல்வராகவன் என்னுடைய அனுபவத்தில் நான் மிகச் சிறந்த இசை ஆல்பம் என்றால் அது மணிரத்தினம் மற்றும் ரகுமானுடைய பொன்னியன் செல்வன் தான், மிக நுணுக்கமான ஒலிகள் கூட துல்லியமாக கவனம் செலுத்தியது வியக்க வைக்கிறது என்று புகழ்ந்து ட்வீட் செய்திருந்தார். இதற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் நன்றி செல்வா.. என்று ஒரு ஸ்மைலி இமேஜுடன் ரீட்வீட் செய்து இருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.