இயக்குனர் செல்வராகவனின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு வைரல்.

கோலிவுட் திரை உலகில் வித்தியாசமான ஜொனரில் படங்களை இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

மண்டையை பிச்சுகிட்டு கதையை எழுதும் இயக்குனர் செல்வராகவன்!!… புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு வைரல்.!

அதனைத் தொடர்ந்து மோகன் ஜி-ன் பாகாசூரனில் நடித்து வரும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து ‘இதான் மண்டையை பிச்சுகிட்டு எழுதுறது’ என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் சீக்கிரமாக கதையை எழுதுங்கள் தலைவா என்று கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.