தமிழ் சினிமா பார்க்காத சூப்பர் கதையுடன் செல்பி திரைப்படம் வெளியாகியுள்ளது.

Selfie Movie Review : அடிக்கடி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் செல்பி. மதிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வர்ஷா பொல்லம்மா நாயகியாக நடிக்க கௌதம் மேனன், சந்திர சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். தன்னுடைய மகனை ஒரு என்ஜினியரிங் காலேஜ் வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறார். என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவரும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் போதே சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பிரபல மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்து விடும் புரோக்கர் வேலையை தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்கிறார். இதே கல்லூரியில் முக்கிய புரோக்கராக பணியாற்றி வருகிறார் கௌதம் மேனன். ஒரு கட்டத்தில் ஒரு பிரச்சனையில் சிக்க ஜிவி பிரகாஷின் நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இருப்பினும் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் இந்த வேலையைச் செய்ய அதன் பின்னர் என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஜிவி பிரகாஷ். வர்ஷா பொல்லம்மாவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. ஜிவியை தேடுவது, காதல் செய்வது என இருந்து விட்டு போகிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பால் நம்மை திரும்பிப் பார்க்க வைக்கிறார்.

ஜிவி பிரகாஷ் அவர்களே இசையமைத்த இந்த படத்தில் ஒரு பாடல்கூட ரசிகர்களை கவரவில்லை.

எதார்த்தமான அப்பாவாக வாழ்ந்துள்ளார் சந்திரசேகர். ‌‌ மதிமாறன் முதல் அரை மணி நேர கதையை சொதப்பாமல் இருந்திருந்தால் சூப்பரான படமாக இது இருந்திருக்கும். க்ளைமாக்ஸ் காட்சியையும் சீக்கிரம் முடித்து விட்டார்கள்.

ஆரம்பத்தையும் முடிவையும் அழகாககாக கொடுத்திருந்தால் செல்பி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக இருந்திருக்கும்.

REVIEW OVERVIEW
செல்ஃபி விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
selfie-movie-reviewமொத்தத்தில் செல்பி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம்.