Sei Movie

Sei Movie : தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கொடுத்ததும் தங்களால் படம் வெளியிட முடியவில்லை என செய் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

நகுல் நடிப்பில் ராஜ் பாபு இயக்கத்திலும் மண்ணு உமேஷ் என்ற அறிமுக தயாரிப்பாளரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் செய்.

இந்த படம் வரும் நவம்பர் 16-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் மற்ற சில பெரிய பட்ஜெட் படங்களால் இந்த படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் படத்தை நவம்பர் 16-தேதி வெளியிடும் முயற்சியில் இருந்து பின் வாங்கி கொள்வதாகவும் விரைவில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய் படத்தில் ஆஞ்சால் முஞ்சால் நாயகியாக நடிக்க பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய் படத்தை ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை : 

Sei Movie

மீண்டும் படம் தள்ளி போவது குறித்து படக்குழுவினர் அறிக்கை :

Sei Movie

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.