Seethakaathi Vs Maari 2

Seethakaathi Vs Maari 2 : விஜய் சேதுபதியின் சீதக்காதி படம் தனுஷின் மாரி 2 படத்துடன் மோத இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்களாக விளங்கி வருபவர்கள் தனுஷ், விஜய் சேதுபதி. இவருடைய படங்கள் இரண்டு ஒரே நாள் இடைவெளியில் ரிலீசாக உள்ளன.

தனுஷ், கிருஷ்ணா, சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது. அதே போல் விஜய் சேதுபதி பாலாஜி தரணி தரண் இயக்கத்தில் சீதக்காதி என்ற படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்.

நாடக கலையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஒரேயொரு நாள் வித்தியாசத்தில் சீதக்காதி, மாரி 2 ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளதால் எந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here