Seeru
ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், வருண் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சீறு. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Seeru Movie Review : 

படத்தின் கதைக்களம் :

ஜீவா தன்னுடைய சொந்த ஊரில் தங்கையுடன் வசித்து வருகிறார். மேலும் கேபிள் டிவி ஒன்றை நடத்தி வரும் இவர் எம்.எல் ஏ செய்யும் அட்டூழியங்களை வெளியுலகத்திற்கு கொண்டு வருகிறார்.

இதனால் ஜீவாவை ஒழித்து கட்ட திட்டமிடுகின்றனர். இதற்காக மல்லி என்ற வில்லனை அழைத்து வருகிறார் எம்.எல்.ஏ. ஆனால் மல்லி ( வருண் ) தெரிந்தோ தெரியாமலோ ஜீவாவின் தங்கையின் உயிரை காப்பாற்ற பின் மல்லியை தன்னுடைய நண்பனாகவே பார்க்க தொடங்கி விடுகிறார்.

பின்னர் மல்லியின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்பட அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜீவா தன்னுடைய கதாபாத்திரத்தை செம துறுதுறுவென சிறப்பாக செய்துள்ளார், எமோஷன் காட்சிகளில் நம்மையே கலங்க வைக்கிறார். இவர்களின் அண்ணன் தங்கச்சி பாசம் நமக்குள் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.

வருண் எதார்த்தமான நடிப்பால் அழகாக ஸ்கோர் செய்கிறார். படம் முழுக்க தாடியுடன் திரியும் இவர் ஒரு காட்சியில் மட்டும் ஒட்டு தாடி வைத்திருப்பது என்னப்பா இப்படி பண்றீங்களே என்ற கேள்வியை எழுப்புகிறது.

ரியா சுமன் சும்மா பெயருக்கு வந்து சென்று விடுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ள நவதீப் அவரின் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

டி.இம்மானின் இசை படத்திற்கு பெரிய பலம், பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு :

பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவு தெளிவு

எடிட்டிங் :

லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் ஓகே.. தேவையில்லாத காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

இயக்கம் :

ரத்தின சிவாவின் இயக்கம் சூப்பர். ஹீரோ டு வில்லன் என்றில்லாமல் ஹீரோ Vs வில்லனின் வில்லன் என கொண்டு சென்றிருப்பது வித்தியாசமாக உள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. ஜீவா, வருண் நடிப்பு
2. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. லாஜிக் மீறல்கள்

REVIEW OVERVIEW
சீறு விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
seeru-movie-review மொத்தத்தில் சீறு ஜீவாவுக்கு நல்ல காம்பேக்க்காக இருக்கும்.