மாமனிதன் திரைப்படத்திற்காக இயக்குனர் சீனிவாசன் மற்றும் விஜய் சேதுபதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் தான் “மாமனிதன்”. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரிக்க இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் முதல்முறையாக இணைந்து இசையமைத்திருந்தனர். போன மாதம் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் பல பிரபலங்களும் இப்படத்தை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கை அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க வர்த்தக பல்கலைக்கழகம் இயக்குனர் சீனு ராமசாமிக்கு Doctor Of Arts என்ற கெளரவ டாக்டர் பட்டமும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கெளரவ டாக்டர் பட்டமும் ‘மாமனிதன்’ படத்திற்காக வழங்கவுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தோடு இதனை வைரலாக்கி வருகின்றனர்.