தர்மதுரை 2 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை நான் இயக்கவில்லை என சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Seenu Ramasamy About DharmaDurai 2 : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி தமன்னா நடிக்கும் சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தர்மதுரை. தமிழ் சினிமாவின் வெற்றி படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

உருவாகிறது தர்மதுரை 2.. ஆனால் இயக்குனர் சீனு ராமசாமி இல்லை - வெளியான ஷாக்கிங் தகவல்

மேலும் இதனை இயக்குனர் சீனுராமசாமி இயக்குவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். ஆனால் அதனை நான் இயக்குவதாக தகவல் பரவி வருகிறது. அது உண்மை இல்லை. தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை நான் இயக்கவில்லை. என்னுடைய அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

BIGG BOSS-ல சிலப்பேர் நடிக்குறாங்க.., கமல் Sir சண்டை போடணும் – Siddarth Open Talk..!

இயக்குனர் மாற்றப்பட்டு உள்ளது மட்டுமல்லாமல் தர்மதுரை 2 படத்தில் ஆர்கே சுரேஷ் அவர்களே ஹீரோவாக நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.