நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தந்தை மரணம் அடைந்ததாக வெளியான தகவலால் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Seeman Father Passes Away : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சீமான். இவர் நாம் தமிழர் என்ற காட்சியின் மூலமாக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் சீமானின் தந்தை காலமானார் - திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்

சீமானை தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பேசி வருகிறார். சாதாரண கட்சியாக இருந்த நாம் தமிழர் கட்சி இன்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் சற்று நேரத்திற்கு முன்னர் காலமானதாக நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் சீமான் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சீமானின் தந்தை காலமானார் - திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்