Seeman booked under 2 sections for controversy
Seeman booked under 2 sections for controversy

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சை கருத்து பேசியதற்கு எதிராக சீமான் மீது போலீசில் 2 வழக்கு பதியப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்”.

சீமானின் இந்த கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீமானின் இந்த கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

அதாவது, சமீபத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தியது போல சில கருத்துகளை குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அதற்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதில், பாரத ரத்னா முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டு கொண்டுள்ளார்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, சீமான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு கெடுதல் விளைவிக்கும் வகையிலும் பேசியதற்காக சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.