Seeman Blast Vijay and Fans

விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது?? முதலில் விஜய் சூர்யா அளவுக்காவது மக்களுக்காக குரல் கொடுக்கட்டும் என பேசியுள்ளார் சீமான்.

Seeman Blast Vijay and Fans :தமிழக அரசியலில் நாம் தமிழர் என்ற கட்சியின் மூலமாக அரசியலில் ஈடுபட்டு வருபவர் சீமான். தமிழ்த் திரையுலகில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட இவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி கமலுக்கு கொடுக்கிற அடியில விஜய் மட்டுமல்ல எந்த நடிகனும் அரசியலுக்கு வரக்கூடாது என பேசினார்.

சீமானின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்கள் இதற்கு பெரிய அளவில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீமான் மீண்டும் இது குறித்து பேசியுள்ளார். விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு என்ன ஆகப்போகுது? முதலில் விஜய் தகுதிகளை வளர்த்து கொள்ளட்டும்.

அதாவது சூர்யா அளவுக்காவது முதலில் மக்களுக்காக குரல் கொடுக்கட்டும். அதன் பிறகு அரசியலுக்கு வரட்டும் என பேசியுள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் மீண்டும் தளபதி விஜய் அரசியலில் ஈடுபட தகுதி இல்லை என்பது போல பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.