Section 144 to Sabarimala
Section 144 to Sabarimala

Section 144 to Sabarimala – திருவனந்தபுரம்: சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனால் சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக, சபரிமலையில் பதற்றம் நிலவியது.

தற்போது ‘உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து நடந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருவதனால், அங்கு ஏற்கனவே போடப்பட்டிருந்த, 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது’ .

இந்நிலையில், கடந்த 16ம் தேதி மண்டல கால பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டது.

இதற்கு ஒருநாள் முன்னதாக 15ம் தேதி முதல், ஒரு வாரத்திற்கு மீண்டும் 144 தடை உத்தரவு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, அங்கு பதற்றம் குறைந்ததால் தடை உத்தரவை நீக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

ஆனால், தடை உத்தரவை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வரை தடை உத்தரவு அமலில் இருந்தது.

இந்நிலையில் “நேற்று முதல் தற்போது மீண்டும் 4 நாட்களுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 8ம் தேதி நள்ளிரவு வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் மேலும் பதற்றம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here