Section 144 again Sabarimala
Section 144 again Sabarimala

Section 144 again Sabarimala – திருவனந்தபுரம்: ‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்கனவே அமலில் உள்ள 144 தடை உத்தரவு , வரும் டிசம்பர் 21- ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உSத்தரவிட்டுள்ளது’ .

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் படி, இந்த போராட்டங்கள் காரணமாக பம்பா, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் இந்த தடை உத்தரவு தொடர் போராட்டங்கள் காரணமாக, அடுத்தடுத்து பலமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், 144 தடையை விலக்கும் படி இந்து அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள சட்டசபையில் 144 தடை உத்தரவை விலக்கும்படி அமளியில் ஈடுபட்டு, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் “சபரிமலை கோயிலில் அமலில் உள்ள 144 தடையை வரும் டிசம்பர் மாதம் 21- ஆம் தேதி நள்ளிரவு வரை மேலும் நீட்டிப்பதாக பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது”!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை டிசம்பர் 27- ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்போது மீண்டும் 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த 144 தடை உத்தரவு தொடர்ந்து அடுத்தடுத்து பலமுறை நீடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.