Secrets of Padaiyappa Movie

படையப்பா திரைப்படத்தில் நடிக்க சிவாஜி கணேசன் மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்க ரஜினிகாந்த் என்ன செய்துள்ளார் தெரியுமா?

Secrets of Padaiyappa Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இதுவரை 165 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதிலும் குறிப்பாக படையப்பா, முத்து, பாட்ஷா ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

படையப்பா படத்தில் ரஜினிகாந்த்தின் அப்பாவாக நடிக்க பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. இறுதியாக விஜயகுமாரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் இருவரும் நிறைய படங்களில் நடித்து விட்டதால் மீண்டும் வேண்டாம் என முடிவு செய்து சிவாஜியை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளனர்.

சிவாஜி கணேசன் இந்த படத்தில் நடிக்க மிகப் தொகையை சம்பளமாக கேட்க மிரண்டு போயுள்ளார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இதனை ரஜினிகாந்த்திடம் கூற அவர் கேட்ட சம்பளத்தை கொடுங்க என கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் கணக்கு படியே சிவாஜியின் சென்ட்டிமென்ட் மற்றும் காமெடி காட்சிகள் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.