Samyuktha In Bigg Boss

பிக்பாஸில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ள சம்யுக்தா யார் என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க.

Secrets Details of BB4 Samyukta : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கி 3 நாட்கள் ஆகிவிட்டது.

இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இருப்பவர் சம்யுக்தா. இவர் மாடலிங் மற்றும் நடனத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்.

மேலும் சம்யுக்தா சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchise ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான்.

அதுமட்டுமல்லாமல் சம்யுக்தா விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த பாவனாவின் நெருங்கிய தோழி. இவர் தற்போது கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சம்யுக்தாவும் பாவானாவும் இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொகுப்பாளினி பாவனா மூலம் தான் சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பார் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் எழத் தொடங்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.