secret of kalki movie update
secret of kalki movie update

கல்கி படத்தில் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற படம் வெளியாக உள்ளது.

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் குறித்த தகவலை படக்குழு சொல்லி இருக்கிறது.அதாவது யாஸ்கின் கதாபாத்திரத்திற்கு முதலில் மோகன்லால் சார் நடிக்க இருந்ததாகவும் ஆனால் இதற்கு கமல் சார் தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவெடுத்துள்ளனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் மோகன்லால் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.