துணிவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ‌‌

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அஜித்தின் 61வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார்.

படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க மேலும் பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி லைரலாகி வருகிறது. முதல் லுக்கை போலவே இந்த போஸ்டரும் மாஸ் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.