
தளபதி 66 படத்தில் இரண்டாவது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Second Heroine in Thalapathy 66 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விண்ணப்பங்களைப் பெற்று பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் யோகி பாபு உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் விஜய்யின் புதிய லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது.
இதன் மூலம் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதியாகி இருந்தது. மேலும் இந்த படத்தில் விஜயின் இரண்டாவது நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளன.