Sayyesha Saigal

Sayyeshaa Saigal : ஹனிமூன் போட்டோக்களில் சாயீஷா கழுத்தில் தாலி இல்லாத நிலையில் தற்போது திடீரென மஞ்சள் நிற கயிற்று தாலியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வனமகன் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் சாயீஷா. இந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

கஜினிகாந்த் படத்தின் போது ஆர்யாவை காதலிக்க தொடங்கினார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது.

அதன் பின்னர் இவர்கள் ஹனிமூன் சென்றிருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. ஆனால் அவற்றில் ஒரு புகைப்படத்தில் கூட சாயீஷா கயிற்றில் தாலி இல்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் சாயீஷா தாலியுடன் உள்ளார். இதனால ரசிகர்கள் சிலர் குழப்பத்துடன் காமெட்ண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

ஆனால் உண்மை என்ன என்றால் ஆர்யாவும் சாயீஷாவும் முஸ்லீம் முறைப்படி தான் திருமணம் செய்து கொண்டனர். இதனால் தாலியெல்லாம் கட்டவில்லை.

தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஏதாவது ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கும் என்பது தான்.

Sayyeshaa

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.