குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக நடிகை சாய்ஷா தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Sayyesha Look After Baby Delivery : தமிழ் சினிமாவில் வனமகன் என்ற படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாயிஷா. இந்த படத்தை தொடங்கி சூர்யாவுக்கு ஜோடியாக காப்பான் என்ற படத்தில் நடித்தார். மேலும் ஆர்யாவுக்கு ஜோடியாக டெடி மற்றும் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்தார்.

சுங்கச் சாவடிகளை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு தகவல்

ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்திருந்தது. குழந்தையை பெற்றெடுத்த பிறகு சாயிஷா சமூக வலைதளங்களில் எந்தவித புகைப்படத்தில் வெளியிடாமல் ஓய்வில் இருந்து வந்தார்.

Chennai திரும்பிய Valimai படக்குழு! – ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise 

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். குழந்தை பெற்ற பின்னரும் இன்னும் அப்படியே ஸ்லிம்மாக அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.