Sayeesha Rejects Bala Krishna Movie

ரசிகர்கள் பலரும் பயங்கரமாக கலாய்க்க தொடங்கியதால் மிகப் பெரிய நடிகரின் படத்தில் இருந்து விலகியுள்ளார் நடிகை சாயிஷா.

Sayeesha Rejects Bala Krishna Movie : தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாயிஷா. இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

கஜினிகாந்த் திரைப்படத்தில ஆர்யாவுடன் ஜோடி போட்ட சாயிசா அதற்கு அடுத்ததாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் சாயிசா தொடர்ந்து படங்களில் நடித்த வண்ணம் உள்ளார்.

மேலும் இவர் 66 வயதான வயதாகும் பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுகுறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவவே பலரும் சாயிஷாவை கேலி கிண்டல் செய்தனர்.

இதனால் கடுப்பான சாயிசா இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டு இருந்தும் கேலி கிண்டல்களால் அப்படத்திலிருந்து விலகினார் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.