Sayeesha Finished her Portion in Kaappaan | Arya | Mohanlal | Kollywood | Tamil CInema | Latest Cinema News | Suriya | Sayeesha

Sayeesha Finished her Portion in Kaappaan :

அண்மையில் இவர் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் படமாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்

கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு முன்பே 100 கோடியை அள்ளிய தயாரிப்பாளர்!

இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைவது இதுவே முதல்முறை.

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

இப்படத்தில் முதல்முறையாக சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இந்நிலையில் அண்மையில் இவர் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் படமாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

திருமணம் செய்துகொண்ட சாயிஷா அதன் பிறகு நடிக்கும் முதல் படம் காப்பான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் உமா ரியாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.